வையப்பமலையில் முப்பூஜை விழா
ADDED :3499 days ago
நாமக்கல்: திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலை புடவைக்காரி அம்மன், வீரகாரன் மற்றும் சப்தகன்னிமார் கோவில் முப்பூஜை விழா நேற்று துவங்கியது. நேற்றிரவு, 9 மணிக்கு சக்தி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 11 மணிக்கு, புடவைக்காரி அம்மன் கோவிலில் இருந்து, வீரகாரன் கோவிலுக்கு சாமி படைக்கலம் செல்லுதலும், 12 மணிக்கு வீரகாரன் சாமிக்கு சிறப்பு அலங்காரம், கற்பூர ஆராதனை நடக்கிறது. நாளை அதிகாலை, 3 மணிக்கு கன்னிமார் அழைத்தல் மற்றும் பூஜையும், காலை, 6 மணிக்கு காவு சோறு போடுதலும், 8 மணிக்கு வீரகாரன் அம்மன் கோவலில் இருந்து, புடவைக்காரி அம்மன் கோவிலில் சாமி குடி புகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.