திருப்பதி காளஹஸ்தியில் பல்லக்கு சேவை
ADDED :3496 days ago
திருப்பதி: காளஹஸ்தியில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 11ம் நாளான நேற்று இரவு, பல்லக்கு சேவை நடந்தது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம், மார்ச் 2 முதல் நடந்து வருகிறது. 11ம் நாளான நேற்று காலை, சோமஸ்கந்தமூர்த்தி, ஞானபிரசுனாம்பிகைக்கு பால், தயிர், மஞ்சள், சந்தன அபிஷேகம் நடந்தது. பின், பல்லக்கு உற்சவம் நடந்தது. தங்க பல்லக்கில் சோமஸ்கந்தமூர்த்தி, ஞானபிரசுனாம்பிகையும் மாடவீதிகளில் வலம் வந்தனர். பிரம்மோற்சவம், இன்றுடன் நிறைவடைகிறது.