உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை

புதுச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை

புதுச்சேரி: சின்னசுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அங்காள பர÷ மஸ்வரி கோவிலில், 39ம் ஆண்டு பிரமோற்சவ விழா  கடந்த  7ம் தேதி துவங்கியது. மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மயான  கொள்ளை நேற்று நடந்தது. அதையொட்டி, பகல் 1.30 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு  முக்கிய வீதிகள் வழியாக நரிமேடு மயானத்தை அடைந்தது. அங்கு, மாலை 6:00 மணியளவில், மயானக் கொள்ளை நிகழ்ச்சியும் நடந்தது.  ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

வம்பாகீரப்பாளையம்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 20ம்  ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி யது.  அதனையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சாமி வீதியுலா நடந்து  வருகிறது.நேற்று(13ம் தேதி) காலை மகா அபி ேஷகம் யாகசாலை  பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு சிங்க வாகனத்தில்  அம்மன் வம்பாகீரப்பாளையம் சன்னிய õசித் தோப்பில் எழுந்தருள அங்கு, மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இன்று (14ம் தேதி)  மாலை 7:00 மணிக்கு அங்காளம்மனுக்கு தெப்ப  உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !