உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம்

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம்

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், வரும் 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆசி ரமத்தின் அனைத்து பகுதிகளும் புனரமைக்கப்பட்டு, வரும் ௨௫ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி  யாகசாலை பூஜை துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, யஜமான சங்கல்பம், பூர்வாங்கம், கணபதி, வாஸ்து ஹோமங்கள், 11:30 மணிக்கு  பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, ஜபம், ஹோமங்கள், இரவு 8:30 மணிக்கு பூ ர்ணாஹூதி நடக்கிறது. 24ம் தேதி காலை 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஜபம், ஹோமங்கள், 11:30 மணிக்கு பூர்ணாஹூதி,  தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, ஜபம், ஹோமங்கள், இரவு 8:30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை  நடக்கிறது. 25ம் தேதி காலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, ஜபம், ஹோமங்கள், நாடி சந்தானம், மஹா  பூர்ணாஹூதி, கடம் புறப்பாடாகி, 6:15 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் பகவான் மகாலிங்கத்திற்கு, மகா கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு மகன்யாச பூர்வக அஷ்டோத்திரசத கலச மஹாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் ஆசிரம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !