சின்ன திருப்பதியில் 108 கலசாபிஷேகம்
ADDED :3500 days ago
சேலம்: சேலம், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், 108 கலசாபிஷேகம் நடந்தது. சேலம், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், லட்சுமி நரசிம்ம பக்த ஜன சபா சார்பில், உலக நன்மைக்காக, 108 கலசாபிஷேகம் மற்றும் மஹா ஹோமம் நடந்தது. கோ பூஜையுடன் விழா துவங்கியது. காலை, 7 மணி முதல் பகல், 12 மணி வரை நாராயண, சுதர்சன, தன்வந்திரி, பஞ்ச சூக்த, 27 நட்சத்திர, விஷ்ணு துர்கா ஹோமம் நடந்தது. இதையடுத்து, திருமஞ்சனம் மற்றும், 108 கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை மற்றும் பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.