திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் தவக்கால திருப்பயணம்
ADDED :3507 days ago
இளையான்குடி: குண்டுகுளம் பங்கைச் சேர்ந்த, கிறிஸ்தவ மக்கள் தங்களது தவக்காலத் திருப்பயணத்தை ,பங்கு பாதிரியார் மைக்கேல் ஜான் பிரிட்டோ தலைமையில்,குண்டுகுளம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து துவங்கி, கொடிமங்கலம், நாகமுகுந்தன்குடி,ஏமம் வழியாக நடைப்பயணம் மேற்கொண்டனர். நடைபயணத்தில் வீரமங்கலம், வில்லிசேரி, ஏமம், சாத்தமங்கலம், புதுக்குளம்,இட்டிசேரியை சேர்ந்த300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சீராத்தங்குடியில் நடைபயணம் சென்றவர்களை தடியமங்கலம் ஊராட்சி தலைவர் சேகர், குண்டுகுளம் ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், வரவேற்றனர்.