உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: ஏழைகளுக்கு உதவுங்கள்!

ரமலான் சிந்தனைகள்: ஏழைகளுக்கு உதவுங்கள்!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மெதீனா நகர மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். ""அன்புக்குரிய மக்களே! ஒரு மனிதன் தன் உடலை விட்டதும் இறைவன் முன்னால் நிற்க வேண்டி வரும். அப்போது இறைவன் அவரைப் பார்த்து, நான் நோயுற்றிருந்த போது என்னை ஏன் பார்க்க வரவில்லை. பசியால் உம்மிடம் உணவு கேட்டேன். ஏன் தரவில்லை? தாகம் தாளாமல் தண்ணீர் கேட்டேன். ஏன் தரவில்லை? என்று கேட்பான். அதற்கு நீங்கள் என்ன பதில் தயார் செய்து வைத்திருக்கிறீர்கள்?என்று பேசிக் கொண்டுஇருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து இடைமறித்தார்.""நாயகம் அவர்களே! இறைவன் என்னிடம் அப்படி கேட்டால், உலகங்களுக்கெல்லாம் தலைவனான உன்னை பசியோ, நோயோ தாக்க முடியாதேஎன்பேன். ""நோயோ, பசியோ உம்மை வாட்டினால், உன்னால் எங்களை எப்படி பார்க்க முடியும்? அப்படியிருக்க, என் மீது நீ குறை காண்பது நியாயமா? என கேட்பேன், என்றார்.அண்ணலார் தொடர்ந்தார்கள். ""தோழரே! நீர் அப்படி கேட்டால், இறைவன் உம்மிடம், ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரைச் சொல்லி, அவருக்கு ஏன் தண்ணீர் தரவில்லை? ஏன் உணவு தரவில்லை? ஏன் நோயுற்ற போது அவருக்கு ஆறுதல் சொல்லவில்லை? என கேட்பானே! அப்படி செய்திருந்தால், அவர்களின் வடிவில் என்னைப் பார்த்திருப்பீரே என கேட்பான். அதற்கு என்ன பதில் சொல்வீர்? என்றதும், அந்த மனிதர் பதில் சொல்லத் தெரியாமல் தலை குனிந்து அமர்ந்து விட்டார். தொடர்ந்து பேசிய அவர்,"" உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாகக் கருதி, அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவினால், அது இறைவனுக்கே உதவியது போல... என்றார். ஏழைகளுக்கு உங்களால் ஆன உதவியை செய்வது பற்றி சிந்தியுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !