உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.10 வரை திருவிழா நடக்கிறது. முக்கிய விழாவான சுவாமிக்கு பட்டாபிஷேகம் செப்.5 இரவு 7.55 மணி முதல் 8.19 மணிக்குள் நடக்கிறது. செப்.7ல் பகல் 2.30 மணிக்கு புட்டுத்தோப்பில் புட்டுத்திருவிழா நடக்கிறது. தவிர, ஆக.30 முதல் தினமும் சுவாமியின் பல்வேறு திருவிளையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.30ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, 31ல் நாரைக்கு முக்தி கொடுத்தல், செப்.1ல் மாணிக்கம் விற்ற லீலை, 2ல் தருமிக்கு பொற்கிழி அளித்தது, 3ல் உலவாக் கோட்டை அருளியது, 4ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, 5ல் வளையல் விற்ற லீலை நடக்கிறது. செப்.6ல் நரியை பரியாக்கிய லீலை, செப்.8ல் விறகு விற்ற லீலை, செப்.9ல் சப்தாவர்ணச் சப்பரமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !