உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ர காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

வனபத்ர காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 300 ஆண்டுகள் பழமை வாயந்த வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு, இன்று எட்டு ஊர் மக்கள் இணைந்து  கும்பாபிேஷகம் நடத்துகின்றனர். பொள்ளாச்சி வடக்கிபாளையம், புரவிபாளையத்தை அடுத்துள்ளது ஜமீன் காளியாபுரம். இங்கு காட்டுப் பகுதியில், ஓலை குடிலில் குடிகொண்டிருந்த வனபத்ரகாளியம்மனை, கடந்த 300 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வணங்கி வந்தனர். அருகிலுள்ள  சூலக்கல் மாரியம்மனை தங்கையாகவும், இந்த வனபத்ரகாளியை அக்காளாகவும் பாவித்து வழிபடுவது இப்பகுதி மக்களின் மரபு. சூலக்கல் மாரிய ம்மன் கோவில் கும்பாபி ேஷக ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், வனப்பத்ர காளியம்மனுக்கும் கும்பாபிேஷகம் செய்ய அப்பகுதி மக்கள்  தீர்மானித்தனர்.   இதையடுத்து, சுற்றுப்பகுதி எட்டு கிராம மக்கள் சேர்ந்து, அக்கோவிலை கற்கோவிலாக கட்டியுள்ளனர்.  கோவிலுக்கு இன்று  கும்பாபிேஷகம் நடக்கிறது. இன்று காலை, 9:30–10:30 மணிக்கு, பேரூர் ஆதீனம் இளைய சன்னிதானம் மருதாச்சல அடிகள் மற்றும் கவுமார மடம்  குமரகுருபர சாமிகள் ஆகியோர் தலைமையில் கும்பாபிேஷகம் நடக்கிறது.  இத்தகவலை ஜமீன் காளியாபுரம் ஊர் பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !