உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது

சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது

பொள்ளாச்சி : சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, திருவிளக்கு மற்றும் புனித நீர் கலச வழிபாட்டுடன் நேற்று  மாலை துவங்கியது.  பொள்ளாச்சி பகுதியில் பழமையும், பெருமையும் வாய்ந்தது சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில். கடந்த, 21 ஆண்டுகளாக  இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த ஆண்டு திருப்பணிகள் நிறைவேற்றப் பட்டு, வரும் 18ம் தேதி  காலை 6.30 – 8.00 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.  திருவிழாவின் முதல்நாளான நேற்று,  ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் செயல்அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் திருவிளக்கு வழிபாட்டுடன் முதல்நாள் விழா துவங்கியது.    தொடர்ந்து, புனித நீர் கலசவழிபாடு, பிள்ளையார் வழிபாடு, திருமகள், நிலத்தேவர் வழிபாடு மற்றும் ஐம்பூத வழிபாடு மற்றும் பெரும் பேரொளி  வழிபாடு நடந்தது. இரவு 7.30 மணியளவில் காப்பு அணிவித்தல்,சிலை சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருளச்செய்து யாகசாலை பிரவேசம்,  தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் துவங்கி, மலர் வழிபாடு நடந்தது. முன்னதாக நேற்று பகலில், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்  இளம்பரிதி, உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இன்று காலை, 6.00 மணிக்கு மங்கள இசையுடன் துவ ங்கும் திருவிழாவில் இரண்டாம் கால யாகபூஜை நடக்கிறது. மாலை,4.30 மணிக்கு, புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. தேர் வெள்÷ ளாட்டம் நிறைவடைந்ததும், மாலை 6.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !