உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி ராகவேந்திரர் கோவிலில் 421வது ஜெயந்தி விழா!

ஊட்டி ராகவேந்திரர் கோவிலில் 421வது ஜெயந்தி விழா!

ஊட்டி: ஊட்டி ராகவேந்திரர் சுவாமி கோவிலில், 421வது ஜெயந்தி விழா நடந்தது. ஊட்டி பாம்பேகேசில் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில்,  ராகவேந்திரா சுவாமியின், 421வது ஜெயந்தி தினத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் கணபதி ஹோமம்,  மன்யுசுக்த ஹோமம், அஷ்டாச்சர நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, லட்சார்ச்சனை ஆகியவை நடந்தன. காலை, 10:00 மணி முதல் சிறப்பு லட்சார்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு சுவாமியின் திருவீதி உலா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !