திருத்தணி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3530 days ago
திருத்தணி : ராமபிரான் மற்றும் செல்வ விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கனகம்மாசத்திரம் அடுத்த, எல்லப்பநாயுடு பேட்டை கிராமத்தில் உள்ள பஜனை கோவிலில், புதிதாக ராமபிரான், செல்வ விநாயகர் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் அமைக்கப்பட்டன. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து நவக்கிரக, லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று, இரண்டாம் கால யாகசாலை பூஜை, சாந்தி ஹோமம் நடக்கிறது. நாளை (18ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.