நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் பவுர்ணமி முந்தைய ஞாயிற்றுக்கிழமை துவங்கும். கடந்த 11ல் காலை அன்னதானம், இரவு மாரியம்மன் நற்பணி மன்றம் சார்பாக பூச்சொரிதல் நடந்தது. கடந்த 13 அன்று இரவு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கடந்த 14ல் ராஜராஜேஸ்வரி, 15ல் பத்ரகாளியம்மன், நேற்று மீனாட்சி அலங்காரத்தில் இருந்த அம்மன் இன்று சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நாளை லட்சுமி, சனியன்று தவளும் கிருஷ்ணன், ஞாயிற்றுக்கிழமை சிம்ம வாகனத்தில் நகர்வலம் வருகிறார். மார்ச் 21ல் மாரியம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 22ல் பால்குடம், கரும்புத்தொட்டில், பலவேஷ நேர்த்தி கடன் நடக்கிறது. 23ல் அம்மன் புஷ்ப பல்லக்கில் நகர்வலம் வருகிறார். மார்ச் 24ல் அம்மன் முளைப்பாரி, புஷ்ப திருவாச்சியுடன் மஞ்சள்நீராடி, பெண்கள் கும்மியுடன் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் மேலாளர் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் செய்து வருகின்றனர்.