தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 24ல் பூச்சொரிதல்!
ADDED :3531 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மார்ச் 24ல் நடக்கிறது. இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது: மார்ச் 24 மாலை 6.00 மணிக்கு மாரியம்மன் மின் அலங்கார பூப்பல்லக்கில் எழுந்தருளி, மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி, தெற்கு மாசி, மேல மாசி, வடக்கு மாசி வீதிகள், யானைகள், வடக்கு, கிழக்கு வெளி வீதிகள், காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வந்து சேரும். பின் மாரியம்மனுக்கு பூச்சொரிதல், தீபாராதனை நடைபெறும். மாரியம்மன் புறப்பாடாகி வரும் போது பக்தர்கள் மலர், மாலைகளை காணிக்கையாக வழங்கலாம், என்றார்.