ஊத்தாங்கால் கோவிலில் 23ம் தேதி பங்குனி உத்திரம்
ADDED :3533 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஊத்தாங் கால் முனீஸ்வரன் கோவிலில், வரும் 23ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும், காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, வரும் 23ம் தேதி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணியளவில் பால்குடம் ஊர்வலம், செடல் உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம் நடக்கிறது.