உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு கோவில்களுக்கு இன்று கும்பாபிேஷகம்

ஏழு கோவில்களுக்கு இன்று கும்பாபிேஷகம்

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் கிராமத்தில் உள்ள ஏழு கோவில்களில் இன்று(18ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. பண்டசோழநல்லுார் கிராமத்தில் உள்ள விநாயகர், முத்தாலம்மன், வரதராஜ பெருமாள், மல்லிகார்ஜூனீஸ்வரர், விஸ்வநாத சித்தர் மடம், பி டாரியம்மன், அய்யனராப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு இன்று 18 ம்தேதி கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. இதையொட்டி காலை 5.30  மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 8 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாரதனை, காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.  தொடர்ந்து  காலை 9 மணிக்கு விநாயகர், முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு வரதராஜ பெருமாள், பிடாரியம்மன் கோவில்  கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !