உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவலூர் தேர்த்திருவிழா மார்ச்19ல் கொடியேற்றம்

கருவலூர் தேர்த்திருவிழா மார்ச்19ல் கொடியேற்றம்

அவிநாசி: திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான, கருவலூர் மாரியம்மன் கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா,  மார்ச்19, காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அம்மனுக்கு அபிஷேகம், கொடியேற்றுதல், அம்மன் புறப்பாடு, இரவு பட்டினி அபிஷேகம் ஆகியன நடைபெறுகிறது. 22ல் மலர்ப்பல்லக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 23ல் தேருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 3:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மீண்டும் தேரோட்டம், 24, 25ல் நடைபெறுகிறது. 26ல் தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 27ல் மகா தரிசன காட்சி, மஞ்சள் நீர், கொடியிறக்கம், 30ல் பாலாபிஷேகம், மறுபூஜை ஆகியவற்றுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் முன், கம்பம் நடப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது; பக்தர்கள், கம்பத்துக்கு, தண்ணீர் அபிஷேகம் செய்து, வழிபட்டுச் செல்கின்றனர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் விஸ்வநாதன், அறங்காவலர்கள் அர்ச்சுனன், தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !