கடலுார் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3635 days ago
கடலுார்: முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் உள்ள முத்தாலம்மன், பால விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 17ம் தேதி காலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது.
மார்ச்18, காலை கடம் புறப்பாட்டைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.