உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலையில் மார்ச் 20 தேரோட்டம் பக்தர்கள் என்ன கொண்டு வரவேண்டும்?

மயிலையில் மார்ச் 20 தேரோட்டம் பக்தர்கள் என்ன கொண்டு வரவேண்டும்?

மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாளான மார்ச்20,
தேரோட்டமும், மார்ச்20, மறுநாள் அறுபத்து மூவர் விழாவும் நடக்க உள்ளன. வெயில் கொளுத்தத் துவங்கி விட்டது. அதனால், இதுபோன்ற திருவிழாக்களில் கலந்து கொள்ளும் போது, பக்தர்கள் முன்னேற்பாட்டோடு வருவது தான் சாலச் சிறந்தது.

*வெயில் காலம் என்பதால், அதற்கேற்ற பருத்தி ஆடைகளை தேர்வு செய்வது நலம்
*அதிகளவில் நகைகள் அணிந்து வருவதை தவிர்க்கலாம்
*தேரடியில் மட்டும், சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் தொட்டி அமைத்துள்ளது.
அதன் கொள்ளளவு, 3,000 லிட்டர். தேரோட்டத்தின் போது, அதில் குடிநீர் காலியானால், மீண்டும் குடிநீர் நிரப்புவது கடினம். நான்கு மாட வீதிகளிலும், ஆங்காங்கே அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் இருக்கும். எனினும், குடிநீர் பாட்டில்களை நிரப்பிக் கையோடு கொண்டு வந்து விடலாம்.
*வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், வயதானோர், பெண்கள், சிறுவர், சிறுமியர் குடைகளுடன் வந்தால் நலம்
*போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், பெண்கள், முதியோர், குழந்தைகள் அதற்கேற்ற மனநிலையில், தேரோட்டத்திற்கு வர வேண்டியிருக்கும்
*தேரோட்டத்தின் போது, மாநகராட்சி சார்பில் ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு எங்கு செயல்படும் என, அறிவிக்கப்படவில்லை. அதனால், சர்க்கரை நோய்
உள்ளிட்டவற்றால் அவதிப்படுவோர், அதற்கான மருந்து, மாத்திரைகளுடன் வர வேண்டும்
*மாற்றுத்திறனாளிகள் மிக மிக ஜாக்கிரதையாக, மாட வீதிகளில் சென்று வர வேண்டி இருக்கும்
*தேர் ஓடும் போது, குறுகலாக உள்ள கிழக்கு மாட வீதி மற்றும் காந்தி சிலை, வடக்கு மாட வீதி, மாங்கொல்லை  ஆகிய இடங்களில், பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுப்போர், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !