உடுமலை ஏகாம்பரஈஸ்வரர் கோவிலில் வரும் 23ல் கும்பாபிஷேகம்
உடுமலை: உடுக்கம்பாளையம் ஏகாம்பரஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ம் தேதி
நடக்கிறது.
உடுமலை, உடுக்கம்பாளையத்தில் அமைந்துள்ளது, ஏகாம்பரஈஸ்வரர் கோவில். கோவில்
கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு வாஸ்து சாந்தியும், மாலை, 5:00 மணிக்கு, அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம், முதல் கால யாக பூஜை, தீபாராதனையும் நடக்கிறது.மார்ச் 22ம் தேதி காலை, 8:00 மணிக்கு மண்டபார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, நடக்கிறது.மார்ச் 23ம் தேதி காலை, 5:30 மணிக்கு நான்காம் கால பூஜையும், மகா பூர்ணாகுதியும் நடக்கிறது. காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், விமானத்துக்கு கும்பாபிஷேககத்தை தொடர்ந்து, பரிவார சகித காமாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கின்றன. மாலை, 4:00 மணிக்கு, காமாட்சி அம்மனுக்கும் ஏகாம்பரஈஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது; மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடக்கிறது.