உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழாபுரம் கோயில் கும்பாபிஷேகம்

சோழாபுரம் கோயில் கும்பாபிஷேகம்

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சோழாபுரத்தில் குழல்வாய்மொழி அம்மன் உடனுறை விக்கிரம பாண்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 120 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்து 14 ல் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தினமும் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது.
மார்ச்18, காலை 7 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சார்யார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நீலகண்ட தேசிக சுவாமி,கங்காதர சுவாமி, ஞானபண்டித சுவாமிகள், ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா உட்பட சுற்று பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !