மல்லசமுத்திரம் பெரியமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3533 days ago
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மல்லசமுத்திரம் அடுத்த, மரப்பரை பஞ்சாயத்துக்கு, வையப்பமலையில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், கையில் அக்னி சட்டியை ஏந்திச்சென்றனர். தொடர்ந்து உற்சவர் வீதி உலா நடந்தது. பெண்கள் மாவிளக்குகளை எடுத்துக்கொண்டு வீதி வலம் வந்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.