வடமதுரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3534 days ago
வடமதுரை: தென்னம்பட்டி ஊராட்சி கோட்டைக்கட்டியூரில் காளியம்மன், மாரியம்மன்,
பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மார்ச்18, முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கி, முதல் கால பூஜைகள்
நடந்தன. மார்ச்18, காலை கணபதி பூஜையுடன் இரண்டாம் கால பூஜைகள் நடந்து கடம்
புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சீத்தாமரம் நால்ரோடு பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன்அய்யங்கார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.