உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பங்குனி உத்திர விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம்!

கடலுார் பங்குனி உத்திர விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம்!

கடலுார்: கடலுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருக்கல்யாணம் நடந்தது. கடலுார், புதுவண்டிப்பாளை யம் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.  தினமும் காலை, இரவு வீதியுலா நடந்து வருகிறது. ஆறாம் நாள் விழாவான நேற்று முன்தினம் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் இக்÷ காவிலுக்கு எழுந்தருளினர்.  தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் முன்னிலையில், முருகன், வள்ளி தெய்வாணை திருக்கல்யாண  உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாள் விழாவான நாளை 22ம் தேதி காலை 8:00 மணிக்கு தே÷ ராட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !