வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா
ADDED :3493 days ago
காட்பாடி: காட்பாடி அடுத்த திருவலத்தில், வில்வநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது. சிவானந்த மவுனகுரு சுவாமிகள் துவக்கி வைத்தார். முருகர், வினாயகர் தேர், அதற்கு பின்னால், வில்வநாதீஸ்வரர் தேர் என, அடுத்தடுத்து மாட வீதி, பஜார் வீதி வழியாக வந்து, மாலை, 4 மணிக்கு நிலையை அடைந்தது. திருவலம், பொன்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து வந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவாஜி செய்திருந்தார்.