உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் கைலாசநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம்

ராசிபுரம் கைலாசநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம்

ராசிபுரம்: ராசிபுரம், கைலாசநாதர் கோவில் திருக்கல்யாண உற்சவம் நாளை (23ம் தேதி) நடக்கிறது. ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், 29ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, இன்று, (22ம் தேதி) மாலை துவங்குகிறது. விநாயகர் பூஜையுடன் விழா துவங்கி, முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. நாளை காலை, 9 மணிக்கு கிருஷ்ணா தியேட்டர் அருகிலிருந்து பால்குட ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, 10 மணிக்கு மேல் பால தண்டாயுதபாணி மற்றும் ஆறுமுக சுப்ரமணிய சுவாமிகளுக்கு பல்வேறு அபி?ஷகங்களும், 11 மணிக்கு மேல் சண்முக சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் மாலை, 6 மணிக்கு வசந்த விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !