ஒரே இடத்தில் ஐந்து சன்னிதி!
ADDED :3884 days ago
திருப்பரங்குன்றம் மலையைக் குடைந்து கற்பக விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, பெருமாள் ஆகிய ஐவருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் சுப்பிரமணியசுவாமி என்னும் பெயருடன் விளங்குகிறார். அமர்ந்த நிலையிலுள்ள இவரது இடப்பக்கம் தெய்வானை, வலதுபக்கம் நாரதர் உள்ளனர். சூரியன், சசந்திரன் அருகில் இருக்கின்றனர். மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்தில் துர்க்கை தனி சன்னிதியில் காட்சியளிக்கிறாள். அவளைச் சுற்றி பூத கணங்கள் உள்ளனர். தேவ தூதர்கள் வாத்தியம் இசைத்த நிலையில் உள்ளனர்.