திருப்பரங்குன்றம் கோயிலில் ஏடு கொடுக்கும் திருவிழா
ADDED :3821 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் திருவிழாவாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நேற்று காலை விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி, வீதி உலா நிகழ்ச்சி முடிந்து, கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை, சிவாச்சாரியார்கள் பெற்று, சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர். திருவிழா நம்பியார் சிவாச்சார்யார் செல்லப்பாவிற்கு பரிவட்டம் கட்டப்பட்டது.சூரசம்ஹாரம் மார்ச் 24, பட்டாபிஷேகம் மார்ச் 25, திருக்கல்யாணம் மார்ச் 26ல் நடக்கிறது.