உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிவிடு முருகன் கோயிலில் சிலம்பு-தீப்பந்தம் விளையாட்டு

வழிவிடு முருகன் கோயிலில் சிலம்பு-தீப்பந்தம் விளையாட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிலம்பாட்டம், தீப்பந்த விளையாட்டு நடந்தது. வழிவிடுமுருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டினர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றது. நேற்று இரவு சிறப்பு பூஜையை தொடர்ந்து சிலம்பாட்டம், தீப்பந்தம் சுற்றுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், இரவு பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !