உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வேலாயுத சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம்

குழந்தை வேலாயுத சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம்:  காரமடையை அடுத்த குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இங்கு பங்குனி உத்திரம் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம், 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை வள்ளி – தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுதசுவாமி எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இரவு பரிவேட்டையும், தெப்போற்சவமும் மற்றும் சந்தன காப்பு உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !