சக்திவடிவேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
ADDED :3516 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு சக்திவடிவேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாடினர். வண்ணாங்குண்டு கிருஷ்ணர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.