மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
ADDED :3525 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா தனது மூத்த மகன் கார்த்திக்ராஜாவுடன் சுவாமி தரிசனம் செய்தார். பவுர்ணமி தோறும் இளையராஜா மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம். நேற்று பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மகன் கார்த்திக்ராஜாவுடன் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு இளையராஜா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் சார்பில் கண்காணிப்பாளர்கள் வரவேற்றனர். அதிகாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் பூஜையான திருவனந்தல் பூஜையில் இளையராஜா, கார்த்திக்ராஜா கலந்து கொண்டனர். பின் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தனர். உள்பிரகாரம், ஆடி வீதிகளை வலம் வந்து பொற்றாமரைக்குளத்தில் சிறிது நேரம் இருந்தனர். தரிசனம் முடிந்து காலை 6.15 மணிக்கு கோயிலை விட்டு சென்றனர்.