கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் கருடசேவை!
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பிரம்மோற்சவ விழாவில், கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் ஸ்ரீபூமிநீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் ÷ காவிலில், 11வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அன்னவாகன சரஸ்வதி அலங்காரம், சிம்ம வாகன யோகநரசிம்மர் அலங்காரம், முத்துபந்தல் காளிங்க நர்த்தன அலங்காரம், அனுமந்த வாகனம், ராமர் அலங்காரம் ஆகியன நடந்தன. இரவு பெருமாள் கருடவாகனத்தில் வைரமுடி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடசேவை நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிப்புத்து ார் ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து வந்த மாலை மற்றும் ஸ்ரீரங்கம் பெரிய பிராட்டி கோவிலிருந்து வந்த மாலைகள் ஊர்வலமாக எடுத்து வர ப்பட்டன. ஸ்ரீராமானுஜர் எதிர்சேவை சாதித்து, பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்தார். கருடசேவை ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.