மல்லிகா கிராமத்தில் அக்னி கரக உற்வசம்
உளுந்துார்பேட்டை: மல்லிகா கிராமத்தில் பங்குனி உத்திர அக்னி கரக உற்வசம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா மல்லிகா கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன், பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. அதனையொட்டி கடந்த 22ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் சாகை வார்த்தல், மாலை ஊரணி பொங்கல் வழிபாடும் நடந்தது. இரவு அம்மனுக்கு காப்பு கட்டுதலும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு செடல் மரம் நிறுத்ததலும், மதியம் 1 மணிக்கு பாலமுருகன் சுவாமிக்கு பல்வேறு அபி ஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அலகு குத்தி வழிபட்டனர். மதியம் 4:30 மணிக்கு அக்னி கர உற்சவம் நடந்தது. ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடியேந்தி பிச்சை கேட்டு வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு ஆட்டுகிடா அலகு போடுத லும், செடல் உற்சவம் நடந்தது. முன்னதாக குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் நகை, பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.