உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போலீஸ் தலைமையகம், ஜிப்மர்  கல்லுாரி, பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில், ஹோலி பண்டிகை கோலாகலமாக  கொண்டாடப் பட்டது. புதுச்சேரி ஐ.ஜி., அலுவலகம் அமைந்துள்ள தலைமையகத்தில் நேற்று காலை ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. ஐ.ஜி., பிரவீர் ரஞ்சன், டி.ஐ.ஜி., கண்ணன் ஜெகதீசன், சீனியர் எஸ்.பி., சந்திரன் மற்றும் எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வட  மாநில போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை துாவியும், பாடலுக்கு நடனமாடியும்,  இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்,  வண்ணப் பொடிகளை பூசியும், தண்ணீரை ஒருவர் மீது ஒருவர்  பீய்ச்சி அடித்தும் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். புதுச்சேரி  பல்கலைக்கழக வளாகத்திலும், வெளி மாநில மாணவ மாணவியர் உற்சாகத்துடன்  ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !