உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கா ரங்கா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனி தேரோட்டம்

ரங்கா ரங்கா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனி தேரோட்டம்

திருச்சி:ரங்கா ரங்கா கோஷம் முழங்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பங்குனி தேரோட்டத் திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணி வரை, திருமஞ்சனம் நடந்தது. காலை, 5:45 மணிக்கு, நம்பெருமாள், தாயார் சன்னிதியில் இருந்து, கோரதம் எனும் பங்குனி தேருக்கு புறப்பட்டார். காலை, 10:30 மணிக்கு, பங்குனி தேரை வந்தடைந்தார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பக்தர்களின் ரங்கா, ரங்கா கோஷம் முழங்க, நம்பெருமாள் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !