உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவைக்காவடி ஊர்வலம் கோவில் விழாவில் பரவசம்!

பறவைக்காவடி ஊர்வலம் கோவில் விழாவில் பரவசம்!

வால்பாறை: பங்குனி உத்திரத் திருவிழாவில், பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து, தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலின், 64ம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா, கடந்த மாதம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, அண்ணாநகர் சின்னையன் முருகபக்தர்கள் குழுவினர், அண்ணாநகர் இளைஞர் குழுவினரின் சார்பில், பக்தர்கள், நல்லகாத்து ஆற்றில ிருந்து, சுத்துக்காவடி, பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இரவு 7:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை, முருகன் நற்பணி மன்ற  நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !