உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் பொங்கல் சாட்டு விழா பக்தர்கள் பரவசம்!

அவிநாசியில் பொங்கல் சாட்டு விழா பக்தர்கள் பரவசம்!

அவிநாசி: பூண்டி மற்றும் அவிநாசியில்,  பல்வேறு கோவில்களில், பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது. திருமுருகன்பூண்டியில்  ஸ்ரீஆதிமுத்துமாரியம்மன்  கோவிலில், 36ம் ஆண்டு பொங்கல் குண்டம் திருவிழா, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்  அம்மனுக்கு  அபிஷேகம், சிறப்பு  வழிபாடுகள் நடத்தப்பட்டன.  நேற்று முன்தினம், கும்பம்,  படைக்கலம், அம்மை அழைத்தல், குண்டத்துக்கு பூ போடுதல், திரு க்கல்யாண உற்சவம் நடைபெற்றது.நேற்று அதிகாலை குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றுக்கு பின், பக்தர்கள் பூவோடு,  மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். முத்தாரம்மன், சிவபெருமான், சுடலை மாடசுவாமி, ஆஞ்சநேயர் வேடமிட்ட பக்தர்கள், மேளதாளத்துடன் சென்றனர்.  இன்று மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, தலைமை நிர்வாகி குமாரவேல் தலைமையிலான உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.

* அவிநாசி செல்லாண்டியம்மன் கோவிலில், 58வது பொங்கல்  சாட்டு விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய அவ்விழாவில்,  சக்தி அழைத்தல், படைக்கலம், பொங்கல் வைத்தல் நடைபெற்றது. பெண்கள், மாவிளக்கு எடுத்து,  ஊர்வலமாக சென்றனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

* அவிநாசி கிழக்கு வீதி, ஸ்ரீசமயபுரம் மாரியம்மன், அரசமரத்தடி விநாயகர் கோவிலில், 19ம் ஆண்டு பூச்சாட்டு விழா நடந்தது. அவிநாசி லிங்÷ கஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. படைக்கலம், அம்மை  அழைத்தல், அக்னி கும்பம் எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, மஞ்சள் நீர் விழாவுடன், பூச்சாட்டு விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !