உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் பெரியநாயகி ஊஞ்சல் உற்சவத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத  பவுர்ணமி பூஜை 22ம் தேதி நடந்தது.  மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சாயரட்சை பூஜைகள்  நடந்து, மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் மாட வீதிகளை 16 முறை வலம் வருதல், இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி பதினாரு  கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:30 மணிக்கு மூலவர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு  பவுர்ணமி அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !