உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதப்பூண்டி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா

மாதப்பூண்டி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா

செஞ்சி: செஞ்சி தாலுகா, மாதப்பூண்டி பாலசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00  மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை  9:30 மணிக்கு, சிறப்பு பூஜை, 11:00 மணிக்கு, சக்திவேல் ஊர்வலம், தொடர்ந்து காவடி  ஊர்வலம் நடந்தது. பிற்பகல் 1:30 மணிக்கு, தீமிதியும், மஞ்சள் இடித்தல், தேர் இழுத்தல், அலகு குத்துதல், செடல் சுற்றுதல், கொதிக்கும்  எண்ணையில் வடை சுடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதலை நிறை÷ வற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !