உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் ஸ்ரீ தேவி, பூமி தேவி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவ விழா  நடந்தது. அதையொட்டி காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமி தேவி சமேத கஜேந்திர வரதராஜ பொருமாளுக்கு, ஸ்தபனம் நலங்கிட்டு அலங்கார தி ருமஞ்சனம், நீராட்டல் சேவித்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது. விழாவில்  ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முருகன், பரம்பரை அறங்காவலர் வரதராஜ பட்டாச்சாரியார் செய்து  இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !