உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை

குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை

சேலம்: சேலம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் கொண்டு வந்த பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி ஆகியவற்றை கொண்டு, தண்டாயுதபாணி சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !