யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3526 days ago
தேனி: தேனி அருகே நாகலாபுரம், பாலகிருஷ்ணாபுரம் விலக்கில் சுயம்பு யோக ஆஞ்சநேயர் தியான கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 5 அடி உயரம், 2டன் எடையில் ஒரே கல்லில் அமர்ந்த நிலையிலான ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நான்காம் கால பூஜையுடன் கன்னிகா, கோ பூஜை, உயிர் ஊட்டல், கடம்புறப்பாடு நிகழ்வுகளுடன் விமானங்களில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் மூலவர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.