அகங்காரம் தொலைவதற்கு என்ன வழி?
ADDED :3881 days ago
அகங்காரம் என்பதற்கு நேர் எதிரிடையாக இருப்பது பணிவு. அகங்காரத்தை நீக்கிக்கொள்ள முயற்சி செய்பவர்கள். பணிவை ஒரு பழக்கமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். பணிவுடைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே, புல்லைப் போல பணிவுடையவனாக இரு ” என்று கிருஷ்ண சைதன்யரும் உபதேசித்தார். அகங்காரத்துடன் வாழ்வதில் பெருமை இல்லை. அகங்காரம் இல்லாமல் வாழ்வதில்தான் பெருமை இருக்கிறது. வீடு, நிலம் ஆகியவை போன்று பணிவு என்பதும் ஒரு செல்வமாகும். அதனால்தான் பணிவுடைமை என்று, அதை ஓர் உடைமைப் பொருளாகவே வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.