கோவில்பத்து ராஜகணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :3527 days ago
காரைக்கால்: கோவில்பத்து ராஜகணபதி கோவிலில் சூரிய பூஜையை முன்னிட்டு கணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், பங்குனி மாதத்தை முன்னிட்டு ஒரு வார காலம் மாலை நேரத்தில் ராஜகணபதிக்கு சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, கடந்த 19ம் தேதி துவக்கிய சூரியபூஜையில் நேற்று முன்தினம் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.மூலவர் ராஜகணபதி மீது சூரியக் கதிர்கள் படர்ந்தது. அதை தொடர்ந்து தீபாராதனை செய்து, ராஜகணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.