உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகர் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.39 ஆயிரத்திற்கு ஏலம்!

முருகர் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.39 ஆயிரத்திற்கு ஏலம்!

உளுந்துார்பேட்டை: முருகர் கோவிலின் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம், 39 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த, ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது. மார்ச் 14ம் தேதி முதல், 22ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம், கோவில் கருவறையிலுள்ள வேலில் செருகப்பட்டு வந்தது. ஒன்பதாம் நாள் திருவிழாவான இடும்பன் பூஜைக்கு பின், வேலில் செருகப்பட்ட, ஒன்பது எலுமிச்சை பழங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் எலுமிச்சை பழம், 39 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இரண்டாம் நாள் முதல், ஒன்பதாம் நாள் வரையிலான பழங்கள், 22 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டன.கடந்தாண்டு திருவிழாவின் போது, முதல் எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !