உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் 28ம் தேதி தேரோட்டம்

திருச்செந்தூரில் 28ம் தேதி தேரோட்டம்

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்தேரோட்டம் 28ம் தேதி நடக்கிறது.இங்கு ஆவணித்திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. எட்டாம் நாளன்று அதிகாலை சுவாமி சண்முகர், வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர், காலை 10.20 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்திகோலத்தில் அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பச்சை பட்டு, மரிக்கொழுந்து மாலை சாத்தி வழிபட்டனர். ஆவணித்தேரோட்டம், பத்தாம் நாளான 28ம் தேதி காலை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !