உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரக்காணம் அனுமந்தை கோவிலில் தேர்த் திருவிழா

மரக்காணம் அனுமந்தை கோவிலில் தேர்த் திருவிழா

மரக்காணம்: அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று தேர்த் திருவிழா நடக்கிறது. மரக்காணம் அடுத்த  அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று மயானக் கொள்ளை மற்றும் தேர் திருவிழா நடக்கிறது.   விழாவையொட்டி காலை 7:30 மணிக்கு மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு  பூங்கரகம் வீதியுலா நிகழ்ச்சியும், மாலை 4:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன், தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.  தொடர்ந்து 4:30  மணிக்கு பாவாடைராயன் சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !