உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர பக்த ஜன சபாவில் ராதா கல்யாண உற்சவம்

சங்கர பக்த ஜன சபாவில் ராதா கல்யாண உற்சவம்

கடலுார்: கடலுார் சங்கர பக்த ஜன சபாவில் ராதா கல்யாண உற்சவம் நடந்தது.  ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சதாபிஷேக ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு 62ம் ஆண்டு ராதா திருக்கல்யாண உற்சவம் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சங்கர பக்த ஜன சபாவில் நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு நேற்றுமுன்தினம் 26ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 7:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:30 மணிக்கு அஷ்டபதி பஜனை, இரவு 7:30 மணிக்கு ஜானவாசம், வீதி பஜனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 9:00 மணிக்கு ராதா கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !