உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஏப்.7ல் ரத உற்சவம்

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஏப்.7ல் ரத உற்சவம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ரத உற்சவம் ஏப்.,7 ல் நடக்கிறது. கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: ரத உற்சவ விழா மார்ச் 30ல் துவங்கி ஏப்., 8 வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு மாரியம்மன் மார்ச் 29ல், கோயிலில் இருந்து புறப்பாடாகி, மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு தங்கி, மார்ச் 30ல் மாலை புறப்பாடாகி மீண்டும் கோயில் சென்று சேர்த்தியாகும். பின் கொடியேற்றம் நடைபெற்று உற்சவம் துவங்குகிறது. முக்கிய விழாவான ரத உற்சவம் ஏப்.,7 ல் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செய்து வருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !